சவூதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: சவூதி அரேபியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசித்து வரும் தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை அறிந்து கொள்ளவும், தேவையான உதவிகளை வழங்கவும் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை – NRI Cell சார்பில், சவூதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொள்ளும் வகையில் 24 மணி நேர அவசர உதவி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
📞 உதவி எண்கள்:
NRI Cell: 044-22502227
கட்டணமில்லா உதவி எண்: 8002471234
சவூதி அரேபியாவில் வசிக்கும் தமிழர்களின் தற்போதைய நிலை, பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பான தகவல்களை மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.