வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி - அதிராம்பட்டினம் அருகே சோகம்.
மகிழங்கோட்டை கீழக்காடு:
மகிழங்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரி (32) (கணவர் பெயர் ஓமையன்)
என்பவர், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள வேலியில் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதனைத் தொட்டபோது மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாலசுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.