Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

News in Pattukkottai

செல்லிக்குறிச்சி ஏரி தூர்வாரும் நிகழ்வு : நிமல்ராகவன் பங்கேற்பு!

சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை தவெக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

https://www.facebook.com/share/1bB1foLaYW/

செல்லிக்குறிச்சி ஏரி தூர்வாரும் நிகழ்வு : நிமல்ராகவன் பங்கேற்பு! சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை தவெக மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். https://www.facebook.com/share/1bB1foLaYW/

Pattukkottai, Thanjavur | Aug 5, 2026

திமுகவின் கோட்டைக்குள் விழுந்த ஓட்டை? - அதிரையில் அரங்கேறிய சுவாரஸ்யம்!
​கிழக்கு,மேற்கு என தனித்தனியே போராடிய உடன்பிறப்புகள்' மொத்தத்தில் 30பேரு...

​"அதிராம்பட்டினம்னாலே அது திமுகவோட அசைக்க முடியாத கோட்டைப்பா!" என்று மார்பு தட்டிச் சொல்லி வந்த உடன்பிறப்புகள், சமீபகாலமாக உட்கட்சி கலகத்தால் 'கிழக்கு அதிரை', 'மேற்கு அதிரை' என இரண்டாகப் பிரிந்து தனித்தனி பாதை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

​
சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற ​காவிரி விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து காவல் துறை அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

​அந்த வரிசையில், அதிராம்பட்டினத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பிளான் போட்டனர்.
​கால் கடுக்க காத்திருந்த தலைகள்... காற்றில் பறந்த கூட்டம்!

​வழக்கமாக அதிரையில் திமுக கூட்டமோ அல்லது போராட்டமோ என்றால், பொதுமக்கள் திரளாகக் கூடி வீதியை அடைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிலைமையே வேறு!

​ஒற்றுமையாகச் செய்ய வேண்டிய போராட்டத்தைக் கூட 'கிழக்கு' தனியாகவும், 'மேற்கு' தனியாகவும் முன்னெடுத்தனர்.
​காத்திருந்த முக்கியப் புள்ளிகள்: பெருந்திரளாகக் கூட்டம் வரும், கோஷம் போடுவார்கள் என்று முக்கியப் புள்ளிகள் கால் கடுக்கக் காத்திருந்தனர்.

​பிளாப் ஷோ: கடைசியில் கூட்டம் வராததால், வேறு வழியின்றி வந்திருந்த சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் போராட்டத்தில் குதித்தனர். ​முடிவு? வழக்கமான கூட்ட நெரிசலுக்குப் பதில்... போராட்டம் "டொன்டடைன்" என ஊத்திக்கொண்டது!

கூட்டணிகள் பலமாக இருந்தபோது காட்டிய கூட்டம் இப்போதைக்கு இல்லையே ஏன்?

திமுகவின் கோட்டைக்குள் விழுந்த ஓட்டை? - அதிரையில் அரங்கேறிய சுவாரஸ்யம்! ​கிழக்கு,மேற்கு என தனித்தனியே போராடிய உடன்பிறப்புகள்' மொத்தத்தில் 30பேரு... ​"அதிராம்பட்டினம்னாலே அது திமுகவோட அசைக்க முடியாத கோட்டைப்பா!" என்று மார்பு தட்டிச் சொல்லி வந்த உடன்பிறப்புகள், சமீபகாலமாக உட்கட்சி கலகத்தால் 'கிழக்கு அதிரை', 'மேற்கு அதிரை' என இரண்டாகப் பிரிந்து தனித்தனி பாதை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். ​ சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற ​காவிரி விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து காவல் துறை அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ​அந்த வரிசையில், அதிராம்பட்டினத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பிளான் போட்டனர். ​கால் கடுக்க காத்திருந்த தலைகள்... காற்றில் பறந்த கூட்டம்! ​வழக்கமாக அதிரையில் திமுக கூட்டமோ அல்லது போராட்டமோ என்றால், பொதுமக்கள் திரளாகக் கூடி வீதியை அடைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிலைமையே வேறு! ​ஒற்றுமையாகச் செய்ய வேண்டிய போராட்டத்தைக் கூட 'கிழக்கு' தனியாகவும், 'மேற்கு' தனியாகவும் முன்னெடுத்தனர். ​காத்திருந்த முக்கியப் புள்ளிகள்: பெருந்திரளாகக் கூட்டம் வரும், கோஷம் போடுவார்கள் என்று முக்கியப் புள்ளிகள் கால் கடுக்கக் காத்திருந்தனர். ​பிளாப் ஷோ: கடைசியில் கூட்டம் வராததால், வேறு வழியின்றி வந்திருந்த சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் போராட்டத்தில் குதித்தனர். ​முடிவு? வழக்கமான கூட்ட நெரிசலுக்குப் பதில்... போராட்டம் "டொன்டடைன்" என ஊத்திக்கொண்டது! கூட்டணிகள் பலமாக இருந்தபோது காட்டிய கூட்டம் இப்போதைக்கு இல்லையே ஏன்?

Pattukkottai, Thanjavur | Aug 4, 2026

உதயநிதி ஸ்டாலின் கைது: சாலைமறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் - 25நபர்களை கைது செய்தது காவல்துறை , தனியார் மண்டபத்தில் அடைப்பு !

தஞ்சையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிராம்பட்டினம் கிழக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், உடனடியாக உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால், சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அருகிலுள்ள தனியார் திருமண அரங்கில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவியது. 
#BreakingNews #DMK #tvk #uthayanithistalin #adiraixpress #PoliticalDebate #TamilNadu #josaphvijay

உதயநிதி ஸ்டாலின் கைது: சாலைமறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் - 25நபர்களை கைது செய்தது காவல்துறை , தனியார் மண்டபத்தில் அடைப்பு ! தஞ்சையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிராம்பட்டினம் கிழக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், உடனடியாக உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால், சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அருகிலுள்ள தனியார் திருமண அரங்கில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவியது. #BreakingNews #DMK #tvk #uthayanithistalin #adiraixpress #PoliticalDebate #TamilNadu #josaphvijay

Pattukkottai, Thanjavur | Aug 4, 2026