கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை ஜமாத் சார்பாக கடற்கரையோர ஊர்களின் முஸ்லிம்கள் வரலாறை தொகுக்கும் நோக்கில் ஐவர்குழு அதிரைக்கு வருகை தந்தனர்.
பைத்துல்மால் (ABM) மற்றும் நம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் வருகை தந்தனர்.
அதிரையின் பாரம்பரியம், வணிக தொடர்புகள் சமூக சேவை மற்றும் பள்ளிவாசல்களின் கட்டிட்டக் கலையமைப்பு போன்றவற்றையும் நிஸ்வான் மதரஸாவையும் பார்வையிட்டனர்.
பைத்துல்மால் மற்றும் தாருன் நுஸ்ரா ஆகிய சேவை அமைப்புகள் குறித்த விபரங்களையும், மஹல்லா ஜமாத்தின் மார்க்க மற்றும் சமூக சேவைகளையும் கேட்டறிந்து அவர்களின் ஊரிலும் இதுபோன்ற தொடர்ச்சியான அமைப்பை உருவாக்கும் எண்ணத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பின்போது சங்கப் பிரதிநிதிகளும், பைத்துல்மால் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டையிலிருந்து L.ஹமீது மரைக்காயர் (மஹ்மூத் பந்தர் நூலாசிரியர்) மற்றும் ஹுசைனுல் ஆபிதீன், நூர் அலி அப்பாஸ், அபுல்கலாம் ஆஸாத், அப்துல் ரஹ்மான் ஆகியோர் வந்திருந்தனர்.
அதிரை பைத்துல்மால் தலைவர் N.Fபத்ஹுத்தீன் மற்றும் அதிரை ஜமீல் காக்கா (அதிரை தாருத் தவ்ஹீத்) S.M.A. சாகுல் ஹமீது (கடற்கரை தெரு) ஆகியோருடன் ஷம்சுல் இஸ்லாம் சங்க துணை தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களுடன் Shifa Hospital Director O. இம்தியாஸ் அஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
தென்னிந்தியாவின் மாபர் (MAABAR) கிழக்குக் கடற்கரையோர ஊர்களின் தொன்மை மற்றும் பாரம்பரிய தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இக்குழுவினர் காயல்பட்டினம் மற்றும் கீழக்கரைக்கும் செல்கின்றனர்.