அவிஸோ காப்பகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!
மறைந்த S.S. முஹம்மது ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் சேவையைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு அமைப்பு
அதிராம்பட்டினம்: தி ஆக்ஸ்போர்டு அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அவிஸோ மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்திற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறக்கட்டளையின் சிறப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்:
🟢 தலைவர்: A. ஹாஜா அலாவுதீன், M.Sc.
🟢 செயலாளர்: S. ஹுமைரா பானு
🟢 துணைத் தலைவர்: Er. J. ரியாஸ் அஹமது, B.E.
🟢 பொருளாளர்: A. ரஹ்மத்
🟢 காப்பக மேலாளர்: S. முஹம்மது ஜாவித், M.Com.
🟢 அறங்காவலர்: M. அபுபக்கர், B.E.
காப்பகத்தின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களும் அறக்கட்டளையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
காப்பகத்தின் எதிர்கால நலனுக்காக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என புதிய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புக்கு: 9788194182