அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி கோலாகலம்
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான கேரம் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியை MKN டிரஸ்டின் தாளாளர் மீரா சாகிப் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், MKN டிரஸ்டின் உறுப்பினரும் வழக்கறிஞருமான எம்.எம்.எஸ். சகாபுதீன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் நெய்னா முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.