திமுகவின் கோட்டைக்குள் விழுந்த ஓட்டை? - அதிரையில் அரங்கேறிய சுவாரஸ்யம்!
கிழக்கு,மேற்கு என தனித்தனியே போராடிய உடன்பிறப்புகள்' மொத்தத்தில் 30பேரு...
"அதிராம்பட்டினம்னாலே அது திமுகவோட அசைக்க முடியாத கோட்டைப்பா!" என்று மார்பு தட்டிச் சொல்லி வந்த உடன்பிறப்புகள், சமீபகாலமாக உட்கட்சி கலகத்தால் 'கிழக்கு அதிரை', 'மேற்கு அதிரை' என இரண்டாகப் பிரிந்து தனித்தனி பாதை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரத்திற்காக ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து காவல் துறை அவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், அதிராம்பட்டினத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பிளான் போட்டனர்.
கால் கடுக்க காத்திருந்த தலைகள்... காற்றில் பறந்த கூட்டம்!
வழக்கமாக அதிரையில் திமுக கூட்டமோ அல்லது போராட்டமோ என்றால், பொதுமக்கள் திரளாகக் கூடி வீதியை அடைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிலைமையே வேறு!
ஒற்றுமையாகச் செய்ய வேண்டிய போராட்டத்தைக் கூட 'கிழக்கு' தனியாகவும், 'மேற்கு' தனியாகவும் முன்னெடுத்தனர்.
காத்திருந்த முக்கியப் புள்ளிகள்: பெருந்திரளாகக் கூட்டம் வரும், கோஷம் போடுவார்கள் என்று முக்கியப் புள்ளிகள் கால் கடுக்கக் காத்திருந்தனர்.
பிளாப் ஷோ: கடைசியில் கூட்டம் வராததால், வேறு வழியின்றி வந்திருந்த சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் போராட்டத்தில் குதித்தனர். முடிவு? வழக்கமான கூட்ட நெரிசலுக்குப் பதில்... போராட்டம் "டொன்டடைன்" என ஊத்திக்கொண்டது!
கூட்டணிகள் பலமாக இருந்தபோது காட்டிய கூட்டம் இப்போதைக்கு இல்லையே ஏன்?