உதயநிதி ஸ்டாலின் கைது: சாலைமறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் - 25நபர்களை கைது செய்தது காவல்துறை , தனியார் மண்டபத்தில் அடைப்பு !
தஞ்சையில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிராம்பட்டினம் கிழக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், உடனடியாக உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால், சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட அதிரை கிழக்கு திமுகவினர் 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் அருகிலுள்ள தனியார் திருமண அரங்கில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவியது.
#BreakingNews #DMK #tvk #uthayanithistalin #adiraixpress #PoliticalDebate #TamilNadu #josaphvijay