விருத்தாசலம்: கோட்டேரி கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் தாலி, தங்க காசு திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில் சிவன் அம்மன் ஆலயம் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு சென்று இன்று காலை மீண்டும் வந்து பார்த்தார். அப்போது, கோவிலின் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி, 1 கிராம் தங்க காசு மற்றும் உண்டியல் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.