விருத்தாசலம்: பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் பேருந்தில் ஏறக்கூடாது என சக பயணி வாக்குவாதம், போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பு
பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் பேருந்தில் திருநங்கைகள் ஏறியதால் பேருந்தில் இருந்த சகபயணி திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்து ஓட்டுனர் பேருந்தினை காவல் நிலையம் கொண்டு சென்ற பொழுது தகவல் அறிந்து வந்த போலீசார் சக பயணி மற்றும் திருநங்கைகளை சமாதானப்படுத்தி பேருந்தில் அனுப்பி வைத்தனர்.