விருத்தாசலம்: மணிமுத்தாற்றில் மறுபக்கம் தண்ணீர் தேங்காமல் செல்ல கான்கிரீட் பாதை அமைத்ததற்கு நகர்மன்ற தலைவர் நன்றி தெரிவிப்பு
மணிமுத்தாற்றில் மறுபக்கம் தண்ணீர் தேங்காமல் செல்ல கான்கிரீட் பாதை அமைத்ததற்கு விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு மணிமுத்தாற்றின் நீர் தேங்காமல் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் செல்வதற்கு கான்கிரீட் தரைகளில் பாதை அமைக்கப்பட்டது. 15 வருடத்திற்கு பிறகு நல்லதொரு முடிவு எட்டப்பட்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், நீர்வளத்துறை பொறியாளர் மற்றும் நகராட்சி பொறியாளருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.