திருப்பத்தூர்: திருப்பத்தூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்: பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.