ராசிபுரம்: ராசிபுரத்தில் வீடு புகுந்து பணம், செல்போன் திருட்டு: இருவர் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கன்னிமார்ஊத்து பகுதியில் நள்ளிரவில் புகுந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை திருடிய இருவரை ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே ஆடு திருடிய வழக்கில் தொடர்புடையவர்.