துறையூர்: நெட்ட வேலம்பட்டி கிராமத்தில் புளியஞ்சோலை செல்லும் சாலையில் தண்ணீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நெட்ட வருடம் பட்டி காட்டு கொட்டகை பகுதிக்கு கடந்த 10 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இதை கண்டித்து பொதுமக்கள் புளியஞ்சோலை செல்லும் சாலையில் 20 நபர்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் பச்சை பெருமாள் பட்டி பஞ்சாயத்து தலைவர் மனோகரன் ஊராட்சி செயலர் ராஜா சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கலைந்து சென்றன