துறையூர்: செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியில் சகோதரர்கள் இடையே சொத்து தகராறில் ஒருவர் காயம்
துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன்கள் ஜெயபால், சீனிவாசன், செல்லத்துரை. மூவருக்கும் சொத்து தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஜெயபால் காயமடைந்தார். இது குறித்து துறையூர் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.