விருத்தாசலம்: பட்டியலின பெண் மீது தாக்குதல்; சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதாக முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்:பாலக்கரையில் அருண்மொழிதேவன் பேச்சு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாகவும், பட்டியல் இனப்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் உள்ள தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்படி இன்று விருதாச்சலம் பாலக்கரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவும் ஆன அருண்மொழி தேவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.