விருத்தாசலம்: போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
விருத்தாசலம் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மோட்டார வாகன ஆய்வாளர் முருகேசன் துவக்கி வைத்தார். அதில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.