ராசிபுரம்: சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டி ஊராட்சி சாலை ஓரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் கரும்புகையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கழிவுகளை முறையாக அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.