சாத்தான்குளம்: பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி குறுகால்பேரியில் அருந்ததியர் சமூக மக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளம் அருகே உள்ள குறுகால்பேரியில் பத்துக்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 40 வருட காலமாக வசித்து வரும் இவர்களது குடியிருப்புக்கு குறுகால்பேரி மெயின் ரோட்டில் இருந்து 12 மீட்டர் அகலம் உள்ள பொதுபாதை உள்ளதாக கூறப்படுகிறது.