விருத்தாசலம்: சென்னையில் காணமல் போன ஐ.டி ஊழியர் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் சடலமாக மீட்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். மார்ச் மாதம் 9ம் தேதி திடீரென்று காணாமல் போனவர், ஏப்ரல் 10ம் தேதி விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் காப்பு காட்டில் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.