விருத்தாசலம்: 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்-தட்டாஞ்சாவடியில் தங்கர்பச்சான் பேச்சு
பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தட்டஞ்சாவடி, திருத்துறையூர், ஏனதிரிமங்கலம், பைத்தம்பாடி என உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று கூட்டணி கட்சியினருடன் தங்கர்பச்சான் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்து சென்றார். பண்ருட்டி அருகே உள்ள புதுபாளையத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது காகித பேப்பர் மூலம் வேட்பாளர் மீது தூவினார்கள். அங்கு பேசிய அவர், 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அப்போதுதான் தமிழகம் நன்றாக இருக்கும் என கூறினார்.