சென்னையில் அதிரை இளைஞர்களின் செக்கடி FC கால்பந்து தொடர் நிறைவு!
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘செக்கடி FC’ (Chekkadi FC) சார்பில், சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ‘1st Year 5’s Turf Football Tournament’ பரபரப்புடன் நிறைவு பெற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் தொடக்க நிகழ்வில் SISCA செயலாளர் ஜனாப் A.M. ஹஜாபர் அலி மற்றும் இணைச் செயலாளர் ஜனாப் அகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், ரெபிலியன் பிரதர்ஸ் (Rebellion Brothers) அணி முதலிடத்தையும், நித்யா பிரதர்ஸ் (Nithya Brothers) அணி இரண்டாம் இடத்தையும், செக்கடி FC அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல்கீப்பருக்கான தனிப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
சென்னையில் அதிரை இளைஞர்கள் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக கால்பந்து தொடரை நடத்தியதற்கு செக்கடி FC குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.