ராசிபுரம்: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - வக்கீல் உள்பட 9 பேர் அதிரடி கைது
ராசிபுரத்தில் சொத்து தகராறு காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்திய வழக்கில், வக்கீல் சுந்தர்ராஜன் உட்பட 9 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். நிலம் மற்றும் பண விவகாரத்தில் நண்பர்களே கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.