பழனி: பழனி திருஆவினன்குடி கோயிலில் ஒரே நாளில் 60 திருமணங்கள் மற்றும் 85 காதுகுத்து விழா!
கந்தர் சஷ்டி திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பழனி திருஆவினன்குடி கோயிலில் இன்று ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் 85 குழந்தைகளுக்கு மேல் காதுகுத்து வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.