சாத்தான்குளம்: தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த 95 வயது மூதாட்டி ஜிப்பில் ஏற்றி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்ட காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதியவில்லை என கூறி சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். இது குறித்து தாலுகா அலுவலகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சாத்தான்குளம் பேருந்து நிலையம் செல்வதற்காக அந்த மூதாட்டி லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தார்.