சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இருந்து உயர் ரத்த அழுத்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இருந்து உயர் ரத்த அழுத்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது, அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று ஹென்றி மெட்ரிக் பள்ளியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் உயர் ரத்த அழுத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியவாறு சென்றனர். இதில், மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.