சாத்தான்குளம்: தடியங்காய் உரிய விலை இல்லாததால் நஷ்டம் இழப்பீடு தர கோரி கொம்பன்குளத்தில் விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கொம்பன்குளம் பகுதிகளில் உரிய விலை இல்லாததால் பறிக்காமலேயே தடியங்காய்களை விட்டதினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிணற்றுப் பாசனத்தை நம்பி புடலங்காய், தடியங்காய் உள்ளிட்டவைகளை மாற்றுப் பயிராக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கொம்பங்குளம் பகுதிகளில் அதிகளவில் தடியங்காய் சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர்.