கீழ்வேளூர்: வேளாங்கண்ணியில் விழிப்புணர்வு கால்பந்துப் போட்டி: திரைக் கவர்ச்சி அரசியலுக்கு எதிராக உறுதிமொழி!
வேளாங்கண்ணியில் திரைக் கவர்ச்சி அரசியலுக்கு அடிமையாக மாட்டோம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு கால்பந்துப் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பகுத்தறிவு மற்றும் சுயசிந்தனை குறித்த உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.