ராசிபுரம்: ராசிபுரத்தில் வீடு புகுந்து 2.55 லட்சம் கொள்ளை: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கம்பி வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 2.55 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ராசிபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.