ராசிபுரம்: ராசிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: பேருந்து நிலையங்களில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பேருந்து நிலையங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இருப்பினும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.