விழுப்புரம் நகராட்சி வண்டிமேடு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் சீரமைப்புப் பணியின்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டு 20 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய ஒப்பந்த ஊழியரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பல மாதங்களாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்த நிலையில், அதைச் சரிசெய்ய 12 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகளை முடித்துவிட்டு மேலே ஏற முயன்றபோது ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த நவீன் என்ற ஒப்பந்த ஊழியர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் பாறைகளுக்கு நடுவே கால் சிக்கி வெளியே வர முடியாமல் அவர் தவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் கடுமையாகப் போராடி அவரை மீட்டனர்.
காலில் பலத்த காயமடைந்த நவீன், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---#Villupuram #VillupuramNews #Accident #RescueOperation #FireService #Vandimedu #BreakingNews #TNNews