ஆவுடையார் கோவில்: சிங்கவனம் கிராமத்தில் 500 வருடங்கள் பழமை வாய்ந்த விஜய பட்டாபி ராமசாமி திருக்கோவில் ராம நவமி உற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கவனம் ஜமீனுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ விஜய பட்டாபிராமசாமி திருக்கோவில் ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற,சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு., சுவாமி புறப்பாடு ஊர்வலத்திலும் பங்கேற்று கடவுளை வழிபட்ட பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் பிரசாதம் வழங்கினர்.