ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து: வாகனங்கள் நாசம்
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பின்னால் உள்ள குப்பை கிடங்கில் பட்டாசுக் கழிவுகளால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டாடா ஏஸ் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் எரிந்து நாசமாகின. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.