சேலம்: சேலம் ரயில்வே கோட்டம்: 10 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 334 பேர் பலி
Salem, Salem | Nov 13, 2026 சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 51 பேரின் அடையாளம் தெரியவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தை கடப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.