ஆவுடையார் கோவில்: முத்துக்குடா முஸ்லிம் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே அகற்றி விட்டதாக கூறும் அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கிராமத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் முஸ்லிம் தெருவில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி புகார் தெரிவித்து வருவாய்த்துறையினர் பெயரளவுக்கு ஆக்கிரமிப்பை அகற்றி, முழுமையாக அகற்றி விட்டதாக அரசுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், சிரமம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.