ஆவுடையார் கோவில்: தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக வழங்க கோரி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் கடைவீதியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் 202425 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக வழங்க கோரி பல்வேறு கட்சியை சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட இழப்பீடை சரி செய்ய பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.