விருத்தாசலம்: போதைப் பொருள் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாலக்கரையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விருத்தாசலம், பாலக்கரை பகுதியில் நடந்த போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திர குமார், ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளர் அருளழகன், நகர அவைத்தலைவர் தங்கரசு ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க.,வினர் கைகோர்த்து நின்று தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.