விருத்தாசலம்: முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை என அறிவிப்பு
விருதாச்சலம் அடுத்த ரூபநாராயணநல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்தம் பழைய புலன் எண் இடத்தில் அரசு கட்டிடங்கள்,நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்ட இடமும் போக மீதமுள்ள இடத்தில் மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு அதனை 2022 -23 ஆண்டு பணியாற்றிய வருவாய் வட்டாட்சியர் நிலம் உள்ளவர்கள்,வீடு உள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என முறை கேடாக வழங்கிய நிலையில் அதனை ரத்து செய்யக் கோரியும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதத கண்டித்தும் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை