விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக 31 கிராம் தங்கம், ₹28.77 லட்சம் கிடைத்துள்ளது
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், மொத்தமாக 31 கிராம் தங்கம், 1,940 கிராம் வெள்ளி மற்றும் ₹28.77 லட்சம் ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.