ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மொஞ்சனூர் ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர். அனுமதி இல்லை என்ற காரணத்தால் சிலையை அகற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பொதுமக்கள் பட்டா இடத்தில் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.