ஆவுடையார் கோவில்: ஏம்பலில் உள்ள ஸ்ரீ முத்தையன் சுவாமி ஆலய மாசி மக திருவிழாவை ஒட்டி திருத்தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தையன் சுவாமி ஆலயம் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஸ்ரீ முத்தையன் சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழாவில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் வடம் பிடித்து இழுத்து கடவுளை வழிபட்டனர்.