திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வழிப்பறி: பட்டாக்கத்தியால் வெட்டிய 4 பேர் கைது!
திருப்பத்தூர் அருகே இளைஞரை பட்டாக்கத்தியால் வெட்டி பணம் பறித்த பெங்களூரு இளைஞர்கள் உட்பட 4 பேரை கிராமிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 பைக்குகள் மற்றும் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.