சேலம்: சேலத்தில் 401 ரவுடிகள் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை: 39 பேர் கைது!
Salem, Salem | Nov 11, 2026 சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 401 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி, 39 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 136 பேர் மற்றும் பொது இடங்களில் மது அருந்திய 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.