சேலம்: குடிநீர் குழாய் பராமரிப்பு பணியால் 2 மணி நேரம் போக்குவரத்து முடக்கம்
Salem, Salem | Nov 11, 2026 மேட்டூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாய் பழுதுபார்ப்பு பணியால் அஸ்தம்பட்டி - ஐந்து ரோடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் சிக்கித் தவித்தன. போக்குவரத்து காவலர்கள் வந்து நிலைமையை சீர் செய்தனர்.