விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை ஒட்டி மணிமுத்தாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மாசி மகத்தையொட்டி இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மணிமுக்தாற்றில் குவிந்தனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊற்றுகளில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின் பொதுமக்கள் ஆற்றங்கரை விநாயகரை தரிசனம் செய்து விட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்