விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகத்திருவிழா தேரோட்டதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.