விருத்தாசலம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி காத்திருப்பு போராட்டம்
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாநாட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.