நாமக்கல்: நாமக்கல்லில் விநாயகர் சதுர்த்தி: மல்லிகை பூ விலை ரூ.1200 ஆக உயர்வு!
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாமக்கல்லில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகை மற்றும் முல்லைப்பூ கிலோ 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.