நாமக்கல்: விடுதியில் மது பாட்டில்கள் பறிமுதல் - காப்பாளர் அதிரடி பணிநீக்கம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அறைகளில் மது பாட்டில்கள், கூலி பாக்கெட்டுகள் மற்றும் அரிசி பற்றாக்குறை கண்டறியப்பட்டதை தொடர்ந்து விடுதி காப்பாளர் சிவக்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.