திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகள் இருப்பு, நோயாளிகளின் வசதிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிய மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பதற்கான இடங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.